ரூ 68 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

Update: 2023-08-15 17:33 GMT


வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் திருப்பத்தூர் பழனி லாலாபேட்டை திருச்சி கரூர் பகுதிகளை சேர்ந்த 131 விவசாயிகள் 1821 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர் வெள்ளகோவில், முத்தூர், ஆர்.எஸ். ஊத்துக்குளி, காங்கயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த 12 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். நல்ல தரமான தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.78.75 பைசாவிற்கும், இரண்டாம் தரமான தேங்காய் பருப்பு ரூ.58.85 பைசாவிற்கும் ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ.68லட்சத்து 26 ஆயிரத்து 45-க்கு விற்பனை நடைபெற்றது.

இந்த தகவல்களை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி மகுடேஸ்வரன் தெரிவித்தார்

மேலும் செய்திகள்