திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 விவசாயிகள் 33 மூட்டைகள் (1804 கிலோ) தேங்காய் பருப்பை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்துக்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.78 -க்கும், குறைந்த பட்சமாக ரூ.68-க்கும், சராசரியாக ரூ.76- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆர்.மாரியப்பன் செய்திருந்தார்.