உடும்பை விழுங்கிய நாகப்பாம்பு

மசினகுடி அருகே உடும்பை விழுங்கிய நாகப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-09-28 18:45 GMT

கூடலூர், 

மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மசினகுடி வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது 3 அடி நீளமுள்ள உடும்பை நாகப்பாம்பு விழுங்கியது தெரியவந்தது. தொடர்ந்து பாம்பு பிடிக்கும் நிபுணர் முரளி வரவழைக்கப்பட்டார். பின்னர் 6 அடி நீளம் உள்ள நாகப்பாம்பை பிடித்து வனத்துறையினர் அடர்ந்த வனத்தில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர். முன்னதாக விழுங்கிய உடும்பின் உடலை நாகப்பாம்பு வெளியே தள்ளியது. அதன் பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்