"2026ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி"- அன்புமணி ராமதாஸ்

2026ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-04 10:50 GMT

மதுரை ,

2026ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் ,

எங்களுடைய நிலைப்பாடு 2026 ல்தமிழ்நாட்டில் பாமக கட்சி ஒருமித்த கட்சிகளுடன் சேர்ந்து ஒரு கூட்டணி ஆட்சி அமைக்கும்.  அதற்கேற்ப வியூகங்களை 2024ல் நாங்கள் எடுப்போம்.என தெரிவித்தார்.

மேலும் ராகுல் காந்தியின் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

சாதாரணமான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கப்பட்டது.  சாதாரண வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏற்றுக்கொள்ள முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்