பொறியியல் அல்லாத பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி

தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் அல்லாத பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி ; விண்ணப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள்

Update: 2023-07-25 18:45 GMT


திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், மற்றும் கோட்டூர் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. இதில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள் தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித் தகுதி வயது வரம்பு இடஒதுக்கீடு ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி, விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணி மற்றும் விலையில்லா பஸ் பயண அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரி, நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்