காவலர் தேர்வுக்கு பயிற்சி
மயிலாடுதுறையில் காவலர் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் மகாபாரதி கூறினார்.;
மயிலாடுதுறையில் காவலர் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் மகாபாரதி கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 359 இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறை காவலர், தீயணைப்பாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்து தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச மாதிரி தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இந்த பயிற்சி நடக்கிறது. தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 50 இலவச மாதிரி தேர்வுகள் மற்றும் விளக்க வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இலவசமாக...
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை பணிக்கு தயாராகும் இளைஞர்கள் பூம்புகார் சாலை பாலாஜி நகர், 5-வது குறுக்குத் தெரு, மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்புகொண்டு இலவசமாக நடத்தப்பட்டு வரும் மாதிரி தேர்வு மற்றும் விளக்க வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.