அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கான பயிற்சி

Update: 2023-02-26 19:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:-

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லூரியில் நூலகம் சார்பில் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராவது எப்படி? எனும் தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். கல்லூரி நூலகர் கல்யாணி வரவேற்றார். சென்னை சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் துணை ஆணையர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், போட்டி தேர்வில் வெற்றி பெற விரும்பும் மாணவர்கள், தினசரி நாளிதழ்களை தினமும் வாசிக்க வேண்டும். நாளிதழ்களில் வரும் அனைத்து செய்திகளையும் குறிப்பெடுத்து வைத்து படிக்க வேண்டும். அரசு மற்றும் கல்லூரி நூலகத்தினை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார். மேலும் அரசு தேர்வுகளுக்கு உதவும் இணையதள முகவரிகளையும், வலையொளி பக்கங்களையும் மாணவர்களிடம் பட்டியலிட்டு விளக்கி கூறினார். பெரும்பாலான நேர்முகத் தேர்வுகளில் போட்டியாளர்களின் அறிவை விட அவர்களின் ஆளுமை திறனையே தேர்வர்கள் மதிப்பீடு செய்கிறார்கள் எனவும், தொடர்ச்சியான பயிற்சியின் வாயிலாக நிச்சயம் மாணவர்கள் தங்களை இலக்கினை எட்ட முடியும் என்றும் அவர் கூறினார். மாணவ- மாணவிகளின் சந்தேகங்களுக்கு சரவணன் பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்