மத்திய அரசு பணியாளர் தேர்வுகளுக்கான பயிற்சி

ராணிப்பேட்டையில் மத்திய அரசு பணியாளர் தேர்வுகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-05-29 12:31 GMT

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ -மாணவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

அரசு பள்ளி மாணவ -மாணவிகள், இங்கு வழங்கப்படும் பயிற்சிகளை பெற்று மாதிரி போட்டி தேர்வுகளை எதிர்கொண்டு அதன் மூலம் மத்திய அரசு பணியாளர் போட்டி தேர்வுகளை எளிதாக எதிர்கொண்டு முதன்மை மிக்கவர்களாக தேர்ச்சி பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆகவே மாணவ -மாணவிகளாகிய நீங்கள் இங்கு வழங்கப்படும் அறிவு சார்ந்த பயிற்சிகளை நன்கு கற்று போட்டி தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

இதனைத் தொர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் டாடா குழுமத்துடன் இணைந்து புதிதாக அமைக்கபட்டு வரும் நவீன தொழிற் பயிற்சி மையத்தினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவிதா, திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் உதவி இயக்குனர் மோகன், அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்