கூட்டுறவு சங்கத்தினர் போராட்டம்

சாணார்பட்டி அருகே கூட்டுறவு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-06 19:45 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கட்டாயமாக கனரக வாகனம் மற்றும் வேளாண்மை உபகரணங்களை வாங்க வேண்டும் என்று வற்புறுத்துவதை கண்டித்து பணியாளர்கள் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

4-ம் நாளாக நேற்று சங்கத்தின் சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் மைக்கேல் தலைமையில் நொச்சிஓடைப்பட்டி கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாணார்பட்டி பகுதியில் செயல்படும் 16 கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த செயலாளர்கள், அலுவலர்கள் சுமார் 80 பேர் கலந்துகொண்டனர். இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வழக்கமான பணிகள் ேநற்று நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலர் பாதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்