கல்லணை கால்வாயில் மூழ்கி கூட்டுறவுத்துறை தணிக்கையாளர் சாவு

கல்லணை கால்வாயில் மூழ்கி கூட்டுறவுத்துறை தணிக்கையாளர் சாவு

Update: 2022-08-19 20:06 GMT

திருக்காட்டுப்பள்ளி

தஞ்சைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கல்லணை கால்வாயில் மூழ்கி சென்னையை சேர்ந்த கூட்டுறவுத்துறை தணிக்கையாளர் பரிதாபமாக இறந்தார்.

தண்ணீரில் மூழ்கினார்

சென்னை சிட்லபாக்கம் காந்தி தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 43). சென்னையில் கூட்டுறவுத்துறை தணிக்கையாளராக பணியாற்றி வந்த இவர் தனது நண்பர்களான சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த உதயகுமார்(46), அருண்(43), நேரு நகரை சேர்ந்த சுனில்(42) ஆகியோருடன் சென்ைனயில் இருந்து காரில் திருச்சிக்கு சுற்றுலா வந்தார்.

பின்னர் நேற்று மாலை திருச்சியில் இருந்து தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தனர். அங்கு கல்லணை கால்வாயில் 4 பேரும் குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கமலக்கண்ணன் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் 3 பேரும் கூச்சலிட்டனர்.

கூட்டுறவுத்துறை தணிக்கையாளர் சாவு

இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் கால்வாயில் இறங்கி கமலக்கண்ணனை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை சம்பவ இடத்திற்கு வந்து கால்வாயில் மூழ்கி இறந்த கமலக்கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்