முதல்-அமைச்சர் கோப்பை போட்டி:விளையாட்டு வீரர்கள் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-01-19 19:00 GMT

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் கோப்பை

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பொது, பள்ளி, கல்லூரி மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என பல்வேறு பிரிவுகளில் நடக்கிறது.

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இந்த மாதம் (ஜனவரி), அடுத்த மாதம் (பிப்ரவரி) மாதங்களில் நடைபெறும் இந்த போட்டியில் கிரிக்கெட் விளையாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்வதற்கு கடந்த 17-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

கால அவகாசம் நீட்டிப்பு

இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நாளை (சனிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

எனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அந்தந்த பிரிவுகளில் பதிவு செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் திரளாக பங்கு பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்