தர்மபுரியில் இன்று 'இந்தியா' கூட்டணி பொதுக்கூட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

'இந்தியா' கூட்டணி கட்சிகளின் சார்பில் தர்மபுரியில் இன்று மாலை பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2024-03-29 03:04 GMT

தர்மபுரி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போட்டியிடும் 'இந்தியா' கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தர்மபுரி அருகே தடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. மைதானத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஆ.மணி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்