குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு
நேருவின் வரிகளை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று (நவ.14) குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு வரை இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 20-ந்தேதி கொண்டாடப்பட்டு வந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு, குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பை நினைவுகூரும் விதமாக நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். அவர்களை நாம் வளர்க்கும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்" என்ற நேருவின் வரிகளை குறிப்பிட்டு குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.