தமிழ்நாட்டில் பிஎப்ஐ அமைப்பை முதல்-அமைச்சர் தடை செய்ய வேண்டும் - எச்.ராஜா

தமிழ்நாட்டில் பிஎப்ஐ அமைப்பை முதல்-அமைச்சர் தடை செய்ய வேண்டுமென எச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-09-27 07:37 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பாஜக, இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் வீடுகளை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக கைது நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தாம்பரம் அடுத்த சிட்டலபாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகரின் வீட்டிற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறுகையில், குற்றம் செய்பவர் மட்டும் குற்றவாளியல்ல.. அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர், அதை தூண்டிவிடுபவர் அனைவரும் குற்றவாளிகள் தான்.

அதேபோல், இந்த பயங்கரவாதிகளை தப்ப வைக்க செய்வதற்காக தேசவிரோத தீய சக்திகள் திருமாவளவன், சீமான் போன்றவர்கள் இதை பாஜக, இந்து மத அமைப்புகள் அவர்களே செய்திருப்பார்கள் என பேசியது எதற்கென்றால் திசை திருப்பி இந்த பயங்கரவாதிகள் பிஎப்ஐ, எஸ்டிபிஐ-யை தப்பிவிக்க செய்வதற்காக செய்த கிரிமினல் செயல். இதுவும் குற்றம் தான்.

ஆகையால், திருமாவளவன், சீமான் போன்ற தேசவிரோதிகள், பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள், கைக்கூலிகள் இவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் பிஎப்ஐ அமைப்பை தடை செய்யவேண்டுமென நான் தமிழ்நாடு முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், இந்த சாதாரண கைது போதாது... டிஜிபி சைலேந்திரபாபு கூறியதுபோல் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசியபாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்