கரை ஒதுங்கிய பீடி இலை மூடை மூலம் துப்பு துலங்கியதா?

கரை ஒதுங்கிய பீடி இலை மூடை மூலம் துப்பு துலங்கியதா? என விசாரணை நடந்து வருகிறது.

Update: 2023-08-30 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் மூடை ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பாம்பன் போலீசார் விரைந்து சென்று கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த அந்த மூடையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அப்போது அந்த மூடையில் சுமார் 30 கிலோ பீடி இலை இருப்பது தெரியவந்தது. இது குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறும்போது, "பிடிபட்டுள்ள தங்கக்கட்டிகளுக்கும், கரை ஒதுங்கிய பீடி இலை மூடைக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அதாவது, பல நாட்களாக படகுகளில் டன் கணக்கில் பீடி இலை கடத்திச் சென்றுள்ளனர். அதில் கடலில் தவறி விழுந்த ஒரு மூடைதான் கரை ஒதுங்கி இருக்கிறது. இலங்கையில் பீடி இலைக்கு கடும் கிராக்கி உள்ளது. எனவே டன் கணக்கிலான பீடி இலைக்கு மாற்றாக இந்த தங்கக்கட்டிகள் கைமாறி இருக்கலாம் என ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்