மே 1-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்
மே 1-ந் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.;
விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் தனியார் மதுபான உரிமஸ்தலங்கள் தொழிலாளர் தினமான மே 1-ந் தேதியன்று தற்காலிகமாக மூடப்பட வேண்டும். இதனை மீறி செயல்படுபவர்கள் மீது விதி முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.