நெல்லையில் 4 டாஸ்மாக் கடைகள் அடைப்பு

நெல்லையில் 4 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட உள்ளன.

Update: 2023-06-30 20:34 GMT

நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் ஆனித்தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலை சுற்றியுள்ள டவுன் வடக்கு மவுண்ட் ரோடு, மணிபுரம் சர்வீஸ் ரோடு, தச்சநல்லூர் வத்தல் மார்க்கெட் அருகில், தச்சநல்லூர் தேனீர்குளம் பகுதியில் உள்ள மொத்தம் 4 டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்களை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டால் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்