ரோடு அகலப்படுத்தும் பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றம்:பா.ம.க. சார்பில் நூதன போராட்டம்கண்ணீர் அஞ்சலி பேனருடன் ஒப்பாரி வைத்தனர்
ரோடு அகலப்படுத்தும் பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றப்படுவதை கண்டித்து பா.ம.க. சார்பில் கண்ணீர் அஞ்சலி பேனருடன் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடைபெற்றது.
பவானி
தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் இருந்து பவானி வரை ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரோட்டு ஓரத்தில் இருந்த புளியமரம், வாகை மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இதை கண்டித்து அம்மாபேட்டை அருகே உள்ள சித்தாரில் பா.ம.க. பசுமை தாயகம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
பசுமைத் தாயகத்தின் மாநில துணைச் செயலாளர் ஒரிச்சேரி எஸ்.ராஜேந்திரன் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.சித்தாரில் ரோட்டு ஓரத்தில் இருந்து வெட்டப்பட்ட 122 ஆண்டுகள் பழமையான வாகை மரத்துக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.