கால்வாய் கட்டும் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம்
விருதம்பட்டு பகுதியில் கால்வாய் கட்டும் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
வேலூர் மாநகராட்சி காட்பாடி விருதம்பட்டு பகுதியில் கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக சிலர் ஆக்கிமிப்பு செய்து வீடுகளின் முன் பகுதிகளை கட்டியுள்ளனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுத்களை அகற்றும்பணி நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அதிரடியாக ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க விருதம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.