நகரங்களுக்கான தூய்மை பணிகள்
கீழப்பாவூர் பேரூராட்சியில் நகரங்களுக்கான தூய்மை பணிகள் நடந்தது.
பாவூர்சத்திரம்:
நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகரம் தூய்மைக்கான உறுதிமொழி எடுத்தல், பேரூராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த சுகாதார பணியாளருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தெரிவித்தல் மற்றும் 1-வது வார்டு பகுதியில் ஒட்டு மொத்த தூய்மைப்பணி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கவுன்சிலர் மா.இசக்கிமுத்து மற்றும் கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, அலுவலக பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.