அரசு பள்ளியில் தூய்மை பணி

நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் தூய்மை பணி நடந்தது.

Update: 2022-09-27 18:45 GMT

குன்னூர், 

குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீர், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக நம்ம ஊரு சூப்பர் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து வருகிற 2-ந் தேதி முதல் பிரச்சார இயக்கம் நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக கிராமப்புறங்களில் உள்ள பொதுஇடங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், நீர்நிலைகள், சந்தை பகுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்களில் தூய்மையை உறுதி செய்யும் பொருட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக குன்னூர் உபதலை அரசு பள்ளியில் தூய்மை பணி நடைபெற்றது. அரசு பள்ளி வளாகத்தை 40-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் புதர் செடிகளை அகற்றியும், குப்பைகளை அப்புறப்படுத்தியும் சுத்தம் செய்தனர். பள்ளியை சூழ்ந்திருந்த முட்புதர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்