அம்மா மண்டபம் படித்துறையில் தூய்மைப்பணி

அம்மா மண்டபம் படித்துறையில் தூய்மைப்பணி நடந்தது.;

Update: 2023-05-28 20:08 GMT

ஸ்ரீரங்கம்:

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவிரி தன்னார்வ குழு சார்பில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை பகுதியில் காவிரி நதி தூய்மைப்பணி நேற்று நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் மோகன்ராஜ் மேற்பார்வையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காவிரி ஆற்றில் தேங்கி கிடந்த பழைய துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள், மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆறுகளில் குப்பைகள் மற்றும் பழைய துணிகளை வீசக்கூடாது, ஆறுகளின் தூய்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவர்கள் கையில் ஏந்தி பொதுமக்கருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த தூய்மை பணியில் ஏராளமான குப்பைகள் அகற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்