திருக்கழுக்குன்றத்தில் இரவு நேரத்தில் தூய்மை பணி - பொதுமக்கள் பாராட்டு

திருக்கழுக்குன்றத்தில் இரவு நேரத்தில் தூய்மை பணி செய்ததை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Update: 2023-08-30 02:18 GMT

திருக்கழுக்குன்றம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெரு, பஜர்வீதி மார்க்கெட் பகுதி, பஸ்நிலையம் சன்னதி தெரு போன்ற பகுதிகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் வீசப்படுகிறது. அவ்வாறு வீசப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை மாடுகள் உண்பதால் மாடுகளுக்கு உடல்நிலை பதிப்பு ஏற்படுகிறது.

மேலும் அங்கு சுற்றிதிரியும் நாய்கள் குப்பை கழிவுகளை சாலையில் இழுத்து வந்து போட்டுவிடுகிறது. காலையில் பணிக்கு செல்லக்கூடியவர்கள், வெளியூர் செல்லக்கூடியவர்கள் மற்றும் காலை நேரத்தில் பெரியகோவிலுக்கு செல்லக்கூடியவர்கள் என அனைவருமே சாலைகளில் கிடக்கும் குப்பைகளை கடந்துதான் செல்லவேண்டியுள்ளது.

மேலும் தினமும் காலை வேளையில் போக்குவரத்து நெரிசலால் குப்பைகளை முழுவதுமாக அகற்ற முடியமால் துப்புரவு பணியாளர்கள் சிரமப்பட்டு வந்தனர் தற்போது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்திலேயே தூய்மை பணியளார்கள் சாலையில் உள்ள குப்பைகளை அகற்றி சாலையோரங்களில் பிளீச்சிங் பவுடர் போடுகின்றனர்.

இதனால் காலை நேரங்களில் வெளியே செல்லக்கூடியவர்கள் மற்றும் கோவிலுக்கு செல்லக்கூடியவர்களும் அந்த பகுதியை கடந்து செல்ல வசதியாக உள்ளது சாலை சுத்தமாகவும் சுகாதாரமும் இருப்பதால் பேரூராட்சி தலைவர் யுவராஜ்க்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தும் பேரூராட்சி துப்புரவு பணியார்களை பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்