தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கு
சுரண்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கு நடந்தது.
சுரண்டை:
சுரண்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் அந்தோணி சுதா ஜேம்ஸ், எஸ்.ஆர்.பால்துரை, நகராட்சி பணியாளர் சங்கீதா மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.