விளாப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மையே சேவை உறுதிமொழி
விளாப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்கப்பட்டது.;
திமிரி
விளாப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் 'தூய்மையே சேவை குப்பை இல்லா இந்தியா' என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் ஒரு மணி நேர தூய்மை பணி நடைபெற்றது. இந்த தூய்மை பணியில் விளாப்பாக்கம் பேரூராட்சி மன்றத் தலைவர் மனோகரன், துணைத் தலைவர் ரேகா கார்த்திகேயன், செயல் அலுவலர் முத்து, வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.