தூய்மை விழிப்புணர்வு பேரணி

கோவிந்தபேரி ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-11-19 18:45 GMT

கடையம்:

கோவிந்தபேரி ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் தூய்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பள்ளி குழந்தைகளுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளை ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ராஜா மற்றும் ஆசிரியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்