தூய்மை விழிப்புணர்வு முகாம்
வலங்கைமான் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வலங்கைமான்:
வலங்கைமான் பேரூராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை சேவை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தனித்தமிழ்மாறன், செயல் அலுவலர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் தி.மு.க. நகர செயலாளர் சிவனேசன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர். முகாமில் வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்ைத தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மக்கும் குப்பை- மக்காத குப்பைகளை தரம் பிரித்து கையாளுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.