கோவில் குளத்தில் தூய்மை பணிகள்

கோவில் குளத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.;

Update: 2023-03-11 18:45 GMT

காரைக்கு

காரைக்குடி நகராட்சி சார்பில் என் குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை தலைமையில் நடைபெற்றது. காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலின் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மை செய்யும் பணியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். நிகழ்வில் நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா, நகர்மன்ற உறுப்பினர்கள் திவ்யா, கார்த்திகேயன், மெய்யர் முகமது சித்திக், ராணி சைத்துன்சேட், பூமிநாதன், நகர் காங்கிரஸ் தலைவர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்