துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் நேற்று மாலை 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் 100-க்கும் அதிகமான துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது துப்புரவு பணியில் ஒப்பந்த முறையை ரத்து செய்து, துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், முறையான ஊதியம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களான கையுறைகள், முககவசம், காலணி ஆகியவற்றை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பென்ஷன் மற்றும் பணப்பலன்களை காலதாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.