வேதாரண்யம் நகராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் தொடங்கி உள்ளன. வேதாரண்யம் மாரியம்மன் கோவில்தெரு, நேரு நகர் உள்ளிட்ட இடங்களில் நடந்த தூய்மை பணியினை நகராட்சி ஆணையர் ஹேமலதா தொடங்கி வைத்தார். அப்போது நகரசபை தலைவர் புகழேந்தி, துணைத்தலைவர் மங்களநாயகி, வார்டு உறுப்பினர் குமரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். இதையொட்டி ராசாகுத்தான் குளக்கரை முழுவதும் மண்டி கிடந்த புதர்கள் அகற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து மாரியம்மன் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். பின்பு குளக்கரை பகுதிகளில் நகராட்சியின் சார்பில் ஆணையர் ஹேமலதா மரக்கன்றுகளை நட்டார்.