தூய்மை இந்தியா திட்டத்தில் சுத்தம் செய்யும் பணி
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தில் டீன் பாப்பாத்தி தலைமையில் சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. முன்னதாக துாய்மை குறித்து வலியுறுத்தும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டீன் பரிசு வழங்கினார்.
தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.