ஆரணி
தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அதையொட்டி ஆரணி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளிலும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை ஊராட்சி மன்றம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் அனைத்துப் பணியாளர்களை கொண்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிகளில் ஒட்டடை அடித்தல், கரும் பலகைைய சுத்தம் செய்தல், மேஜை நாற்காலிகள், ெபஞ்ச் ஆகியவற்றை சுத்தம் செய்தனர். வகுப்பறைக்கு வெளியே புல்களை அகற்றினர்.
தூய்மைப் பணிகளை ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கு.இந்திராணி, இல.சீனிவாசன் மேற்பார்வையில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மேற்கொண்டனர்.