கடல் தின தூய்மை பணி

வேளாங்கண்ணியில் கடல் தின தூய்மை பணி நடந்தது.

Update: 2023-06-10 19:15 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் உலக கடல் தினத்தை முன்னிட்டு வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் தூய்மை பணி நடந்தது. இதை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா, செயல் அலுவலர் பொன்னுசாமி, கடலோர காவல் படை போலீசார் முன்னிலையில் கடல் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. தூய்மை பணியினை பேரூராட்சி தலைவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்