ஆண்டிப்பட்டியில் பெரிய ஓடையை தூர்வாரும் பணி

ஆண்டிப்பட்டியில் பெரிய ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றது.;

Update: 2022-10-21 16:45 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு கோழிப்பண்ணை அருகே உள்ள பெரிய ஓடை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் செல்ல வழியின்றி, சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும் ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பெரிய ஓடையை தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொக்லைன் எந்திரம் மூலம் ஓடையை தூர்வாரும் பணி  தொடங்கியது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் பொன்.சந்திரகலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர்கள் ராமசாமி, சரவணன், சுரேஷ் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்