வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் தூய்மை பணி

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் தூய்மை பணி நடந்தது.

Update: 2022-06-11 16:00 GMT

சீர்காழி:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன், துணைத்தலைவர் அன்புசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் பாமா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோவில் தெற்கு வீதி, தேர் கீழவீதி, தேர் மேலவீதி, வடக்குவீதி உள்ளிட்ட வீதிகளில் பேரூராட்சி பணியாளர்கள் ஏராளமானோர் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வர்த்தக பிரமுகர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்