சாலையை சுத்தம் செய்யும் சுகாதார வாகனம்
சாலையை சுத்தம் செய்யும் சுகாதார வாகனம்
தளி
உடுமலை பகுதியில் சாலையை சுத்தம் செய்யும் சுகாதார வாகனத்தின் பயன்பாட்டை அமைச்சர் மு.ெப.சாமிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வளர்ச்சிப்பணிகள்
உடுமலை நகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் பகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு சில திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 3- வது வார்டு பகுதியில் உள்ள வேலன் நகரில் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் கருணாநிதி பூங்காவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து அங்கு மரக்கன்றையும் நடவு செய்தார்.
சுகாதார வாகனம்
அதைத் தொடர்ந்து உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் சுகாதார வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் பங்களிப்புடன் ரூ. 77 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட இந்த வாகனத்தை அமைச்சர் கொடி அசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.