தூய்மை பணியாளர்களை செந்தாரப்பட்டி பேரூராட்சியிலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்

தூய்மை பணியாளர்களை செந்தாரப்பட்டி பேரூராட்சியிலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் கார்மேகத்திடம் கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.;

Update:2022-06-05 23:36 IST

சேலம்:

செந்தாரப்பட்டி பேரூராட்சி தலைவர் லீலாராணி, துணை தலைவர் அமுதா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலெக்டர் கார்மேகத்திடம் ஒரு மனு கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

செந்தாரப்பட்டி சிறப்பு நிலை பேருராட்சி மிகவும் பின்தங்கியது. பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதை கைவிட்டு, ஏற்கனவே பணியாற்றிய தூய்மை பணியாளர்களை, செந்தாரப்பட்டி பேரூராட்சியிலேயே பணிசெய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்