வைகை ஆற்றில் மூழ்கி துப்புரவு பணியாளர் பலி
வைகை ஆற்றில் மூழ்கி துப்புரவு பணியாளர் பலி
பரமக்குடி
பரமக்குடி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). இவர் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை கணேசன் மூவேந்தர் நகர் 3-வது தெருவிற்கு பின்னால் வைகை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது நிலை தடுமாறி வைகை ஆற்றில் விழுந்த அவர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. உடனே இது குறித்து பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கணேசனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இதுகுறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.