தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு உறுதிமொழி

கூடலூர் நகராட்சி சார்பில், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணி மண்டபத்தில் நடந்தது.

Update: 2023-09-21 22:15 GMT

கூடலூர் நகராட்சி சார்பில், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணி மண்டபத்தில் நடந்தது. இதற்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் தலைமை தாங்கினார். பென்னிகுவிக் மணிமண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குப்பை கழிவுகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

ஊர்வலத்தின்போது, எனது குப்பை எனது பொறுப்பு, திட்டம் மூலம் தூய்மை நகரங்களாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களை வலியுறுத்தினர். பின்னர் மணி மண்டபம் முன்பு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்