ரூ.48 லட்சத்தில் வகுப்பறை, குடிநீர் தொட்டி

வாலாஜா ஒன்றியத்தில் ரூ.48 லட்சத்தில் வகுப்பறை, குடிநீர் தொட்டியை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.

Update: 2022-06-13 18:11 GMT

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தில் கல்மேல்குப்பம் ஊராட்சி, கல்புதூர் கிராமத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, கல்புதூர் கிராமத்தில் ரூ.5.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள காரிய மேடை, கல்மேல்குப்பம் முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், ரூ.4.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமையற்கூடம், மாந்தாங்கல் ஊராட்சியில் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என மொத்தம் ரூ.48 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள்திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸகர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, முன்னாள் எம்.பி. முகமது சகி, வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் சேஷா வெங்கட், உதவி கலெக்டர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கர், வாலாஜா தாசில்தார் ஆனந்தன், ஊராட்சித் தலைவர்கள் ராஜரத்தினம், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்