அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

Update: 2023-07-03 18:50 GMT

வகுப்புகள் தொடக்கம்

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, நேற்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டை கல்லூரி, வேப்பூர் மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கின.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, நேற்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

உற்சாக வரவேற்பு

பள்ளிப்படிப்பை தொடர்ந்து ஆர்வத்துடன் கல்லூரியில் கல்வி கற்க காலடி எடுத்து வைத்துள்ள மாணவ-மாணவிகளை கல்லூரியில் பயிலும் 2, 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் மற்றும் முதல்வர், பாடப்பிரிவுகளின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு பேராசிரியர்கள் உயர் கல்வி கற்பதன் அவசியத்தை எடுத்துக்கூறி பாடங்களை கற்பித்தனர்.

கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் என 2 பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்றன. தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்