உத்தரவை மீறி வகுப்புகள் - பள்ளி மீது பாய்ந்த நடவடிக்கை
அரசின் உத்தரவை மீறி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளி மூடப்பட்டது.
திண்டுக்கல்,
கோடை விடுமுறையின் போது மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மேற்கொள்ளக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகளை நடத்தி வந்தனர்.
தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை மன உளைச்சலுக்கு பள்ளி நிர்வாகம் தள்ளுவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகம் மீது மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளி மூடப்பட்டது. மாணவ மாணவிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.