லாரி மோதி 10-ம் வகுப்பு மாணவன் பலி

பெண்ணாடம் அருகே லாரி மோதி 10-ம் வகுப்பு மாணவன் பலியானான். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-09-21 18:45 GMT

பெண்ணாடம், .

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்

பெண்ணாடம் அருகே உள்ள பெ.பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் அகிலன் (வயது 59). வி.சி.க. நிர்வாகி. இவரது மகன் வசீகரன்(15). இவன், பெண்ணாடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவன், கடந்த 13-ந் தேதி மோட்டார் சைக்கிளில் தனது தாய் கலைச்செல்வியை ஏற்றிக்கொண்டு பெண்ணாடம் கடைவீதிக்கு வந்தான். அங்கு பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். பொன்னேரி மேம்பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த லாரி வசீகரன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மாணவன் பலி

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வசீகரன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தான். கலைச்செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த அகிலன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்