அரசு பஸ் மீது மோதல்; தனியார் பஸ் டிரைவர் மீது வழக்கு

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் அரசு பஸ் மீது மோதல்; தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது

Update: 2023-02-06 18:45 GMT

குத்தாலம் தாலுகா அரையபுரம் அக்ரஹாரத்தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 48). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 7.45 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்வதற்காக காமராஜர் பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை நிறுத்தியுள்ளார். அப்போது பஸ் நிலையத்திற்குள் தனியார் பஸ் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. தனியார் பஸ்சை ஓட்டிவந்த சீர்காழி கீழவீதியைச்சேர்ந்த பெத்தபிள்ளை மகன் ரகு என்பவர் தனியார் பஸ் சென்றவுடன் தான் அரசு பஸ் செல்லவேண்டும் என்று சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரகு தனியார் பஸ்சை ஓட்டி வந்து அரசு பஸ் மீது பக்கவாட்டில் மோதியுள்ளார். இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ளது. இதுகுறித்து சங்கர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் ரகுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்