கிராமசபை கூட்டத்தில் கைகலப்பு; 4 பேர் மீது வழக்கு

ஆலங்குளம் அருகே கிராமசபை கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பஞ்சாயத்து துணைத்தலைவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-08-15 17:14 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே கிராமசபை கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பஞ்சாயத்து துணைத்தலைவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கிராமசபை கூட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் மாயமான்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகம், குருவன்கோட்டை கிராமத்தில் உள்ளது. நேற்று காலையில் பஞ்சாயத்து அலுவலகத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்ற பின்னர் கிராமசபை கூட்டம் நடந்தது.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவி பால்த்தாய், துணைத்தலைவர் கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம்

கூட்டத்தில் குருவன்கோட்டையைச் சேர்ந்த பாஸ்கர், பஞ்சாயத்து வரவு-செலவு கணக்குகள் குறித்து கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், பஞ்சாயத்து துணைத்தலைவர் உள்ளிட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இதில் காயமடைந்த பாஸ்கரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாஸ்கர் அளித்த புகாரின்பேரில், பஞ்சாயத்து துணைத்தலைவர் கண்ணன் உள்பட 4 பேர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்