கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல்; 2 பேர் கைது

கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-12 20:52 GMT

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மாரியம்மன் தேர் வீதி உலா வந்தபோது கீழ தெருவைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் சுரேஷ்(வயது 26) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் ராகுல் என்ற யோகேஸ்வரனை(24) கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்