பஸ்சில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்

செய்யாறில் இருந்து ஆரணிக்கு வந்த பஸ்சில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2022-09-15 19:04 GMT

செய்யாறில் இருந்து ஆரணிக்கு வந்த பஸ்சில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் செய்யாறு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரிக்கு தினமும் பஸ்சில் பயணம் செய்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கல்லூரி முடிந்து ஆரணிக்கு பஸ்சில் பயணம் செய்யும் போது கல்லூரி மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது சதீஷ் என்ற மாணவன் தன்னை கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக அவருடைய அண்ணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

தொடர்ந்து அவர், 10 பேரை அழைத்து கொண்டு ஆரணி மாங்கா மரம் பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தார். பின்னர் கல்லூரி மாணவர்கள் வந்த பஸ்சை சதீஷின் அண்ணன் மற்றும் அடியாட்கள் வழிமறித்து சதீஷை தாக்கிய கல்லூரி மாணவர்களை தாக்கி உள்ளனர். அப்போது பஸ்சில் இருந்த கல்லூரி மாணவர்கள் தடுத்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பரபரப்பு

தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வருவதை அறிந்த மோதலில் ஈடுபட்ட அடியாட்கள் தப்பி ஓடிவிட்டனர்.

மோதலுக்கு காரணமான கல்லூரி மாணவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்