கோவில் விழாவில் மோதல்; 8 பேர் காயம்
விக்கிரவாண்டி அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்தனா்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி அருகே மூங்கில்பட்டு காலனியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. திருவிழா கூட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த ரமணா(வயது 22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், நடந்து சென்ற உத்திரவேல் மகன் சித்தார்த்(7) மீது மோதியது. இதில் அவன் காயமடைந்தான். இதை தட்டிக்கேட்டதால் உத்திரவேல் தரப்பினருக்கும், ரமணா தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த முருகன்(47), கவி பாரதி(47), விஜயபாரதி(23), ஆறுமுகம்(40), உத்திரவேல்(32), சாமிநாதன்(40), பூவரசன்(22), திருவேங்கடம்(30) ஆகிய 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.