பச்சையப்பன் கல்லூரி பொங்கல் விழாவில் மோதல் - போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை
பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது இரு தரப்பு மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது இரு தரப்பு மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், 3 பேரை கைது செய்த போலீசார் காயமடைந்த 2 மாணவர்களை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்து ஒரு மாணவரை சிறையில் அடைத்தனர்.