அரசு பஸ் தடுப்பு சுவரில் மோதல்
அரசு பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
நாகை மாவட்டம், வேளாங்கன்னியில் இருந்து கரூர் வழியாக ஈரோட்டிற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் திருச்சி - கரூர் சாலையில் காந்திகிராமம் ராம் நகர் அருகே நேற்று அதிகாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முன்பக்க சக்கரம் தடுப்புச் சுவர் மீது பலமாக மோதியதில் பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.